ஓசன்னா
கிறிஸ்துவில் பிரியமானவர்களே! அன்பின் வாழ்த்துக்கள்! பிதாவாகிய தேவனுடைய அன்பும் கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் கிருபையும் பரிசுத்த ஆவியானவரின் அந்நியோன்னிய வழிநடத்தலும் பாதுகாப்பும் பராமரிப்பும் உங்கள் யாவரோடும் இருப்பதாக! ஆமென்! கிறிஸ்துவின் சீஷர்கள் ஊழியங்களிலிருந்து உங்களை சந்திப்பதில் பெருமகிழ்ச்சி அடைகிறோம். இந்த நாளின் தியானத்திற்கு என்று பரிசுத்த அப்போஸ்தலனாகிய யோவான் எழுதின சுவிசேஷம் புத்தகம் 12:13 குருத்தோலைகளைப் பிடித்துக் கொண்டு அவருக்கு எதிர் கொண்டு போகும்படி புறப்பட்டு ஓசன்னா! கர்த்தருடைய நாமத்தினாலே வருகிற இஸ்ரவேலின் ராஜா ஸ்தோத்திரிக்கப்பட்டவர் என்று ஆர்ப்பரித்தார்கள்! இந்த வசனம் வாசிக்கும்போது ஓசன்னா! என்று சொல்லி ஜனங்கள் எல்லாரும் சொல்லுகிறதை பார்க்க முடியும் ஓசன்னா என்றால் இரட்சித்தருளும் இப்பொழுதே இரட்சித்தருளும் என்று பொருள், கர்த்தருடைய நாமத்தினாலே வருகிற இஸ்ரவேலின் ராஜா ஸ்தோத்திரிக்கப்பட்டவர் என்று ஆர்ப்பரித்தார்கள். கர்த்தராகிய இயேசு கிறிஸ்து அநேக அற்புதங்களைச் செய்து இருந்தார் இந்த காரியம் குறிப்பாக லாசருவை உயிரோடு எழுதின பின்பு மரித்துப் போய் நான்கு நாளாய் கல்லறையில் வைக்கப்பட்ட பின்பு லாசருவே வெளியே வா என்று சொல்லி அவனை கூப்பிட்டு உயிரோடு எழுப்பினார் கர்த்தராகிய இயேசு!அப்படிப்பட்ட ஒரு சூழ்நிலையில் ஜனங்கள் ஆர்ப்பரித்து அவரை வரவேற்கிறார்கள். யோவான்12:12 சொல்லுகிறது மறுநாளிலே இயேசு எருசலேமுக்கு வருகிறார் என்று பண்டிகைக்கு வந்த திரளான ஜனங்கள் கேள்விப்பட்டு, எருசலேம் தான் அவர்களுக்கு முக்கியமான இடம் எல்லா தேசங்களிலுமிருந்து எருசலேமுக்கு வருவார்கள் அந்த நாட்களிலே பண்டிகை என்று வரும் போது அவர்கள் எல்லாரும் கூடி வருகிற பழக்கம் இருந்தது அப்போது இயேசுவைப் பற்றி கேள்விப்பட்ட இயேசுவை விசுவாசிக்கிற ஒரு கூட்டமும் வந்தது ஆமென்! அந்தக் கூட்டம் என்ன செய்கிறது குருத்தோலைகளைப் பிடித்துக் கொண்டு அவருக்கு எதிர் கொண்டு போகும்படி புறப்பட்டார்கள் ஆனால் பாருங்கள் இது ஏதோ ஒரு சாதாரண காரியம் ஆக இது நடக்கவில்லை அல்லது ஏதோ ஒரு எதேச்சையான ஒரு காரியமாக அது நடக்கவில்லை மாறாக சீயோன் குமாரத்தியே பயப்படாதே உன் ராஜா கழுதை குட்டி என் மேல் வருகிறார் என்று எழுதி இருக்கிற பிரகாரமாக இது ஒரு தீர்க்கதரிசனத்தின் நிறைவேறுதல் ஆக நடக்கிறது. பிரியமானவர்களே! சகரியா தீர்க்கதரிசியின் புத்தகம் 9:9 வசனத்தில் சொல்லப்பட்ட படி சீயோன்குமாரத்தியே, மிகவும் களிகூரு. எருசலேம்குமாரத்தியே, கெம்பீரி. இதோ, உன் ராஜா உன்னிடத்தில் வருகிறார். அவர் நீதியுள்ளவரும் இரட்சிக்கிறவரும் தாழ்மையுள்ளவரும் கழுதையின்மேலும் கழுதைக்குட்டியாகிய மறியின்மேலும் ஏறி வருகிறவருமாயிருக்கிறார். ஆமென்! பாருங்கள் இது ஒரு தீர்க்கதரிசனத்தின் நிறைவேறுதலாக சம்பவித்த காரியம்.
கர்த்தராகிய இயேசு தன்னைக் குறித்து எழுதப்பட்டிருக்கிற தீர்க்கதரிசனங்கள் மீது மிகுந்த கவனம் உள்ளவராய் அது செயல்படுகிறதற்கு ஒப்புக்கொடுத்தவராய் இருந்தார் யோவான் ஒரு முக்கிய முக்கியமான ஒரு காரியத்தைச் சொல்லுகிறார் என்ன சொல்லுகிறார்? இவைகளை அவருடைய சீஷர்கள் துவக்கத்தில் அறியவில்லை இவைகளை யோவான் 12:15 வசனத்தில் சொல்கிறார் இயேசு ஒரு கழுதைக் குட்டியைக் கண்டு அதன் மேல் ஏறிப் போனார் அப்போது இந்த காரியங்களையும் முதலாவது அவருடைய சீஷர்கள் அறியாதிருந்தார்கள் ஆனால் இயேசு மகிமை அடைந்த பின்பு இப்படி அவரைக் குறித்து எழுதி இருப்பதையும் தாங்கள் இப்படி அவருக்குச் செய்ததையும் நினைவுகூர்ந்தார்கள் ஆமென் அல்லேலூயா மாற்கு 11:2 வசனத்திலிருந்து வாசித்தோமானால் அங்கேயும் இயேசு பவனி சென்றது எழுதப்பட்டிருக்கிறது இதில் மிகத் தெளிவாக கழுதை எங்கே இருந்து கொண்டுவரப்பட்டது என்று எழுதப்பட்டிருக்கிறது மாற்கு 11:4 வது வசனம் சொல்கிறது இருவழிச்சந்தியில் ஒரு வாசலருகே கட்டியிருந்த அந்த குட்டியை கண்டு அவிழ்த்தார்கள். குட்டி அவிழ்க்கப்படும்போது அங்கே நின்றவர்கள் ஏன் அவிழ்க்கிறீர்கள் என்று கேட்டார்கள் இயேசு அவர்களுக்கு கற்பித்தபடியே உத்தரவு சொன்னார்கள் இயேசு என்ன கற்பித்தார் மாற்கு 11:2வது வசனத்தில் பார்த்தோமானால் உங்களுக்கு எதிரே இருக்கிற கிராமத்துக்குப் போங்கள் அதில் பிரவேசித்த உடனே மனுஷர் ஒருவரும் ஒருக்காலும் ஏறியிராத ஒரு கழுதைக்குட்டி கட்டியிருக்கக் காண்பீர்கள் அதை அவிழ்த்துக் கொண்டு வாருங்கள் ஏன் இப்படி செய்கிறீர்கள் என்று ஒருவன் உங்களிடத்தில் கேட்டால் இது ஆண்டவருக்கு வேண்டும் என்று சொல்லுங்கள் உடனே அதை இவ்விடத்திற்கு அனுப்பி விடுவான் என்று சொல்லி அவர்களை அனுப்பினார் பார்க்கிறோம் அந்த கழுதைனுடைய நிலை என்னவாக இருக்கிறது அது கட்டப்பட்டு இருக்கிறது ஆண்டவர் பவனி வருவதற்கு கட்டில் இருக்குற ஒரு கழுதையை விடுதலையாகி கொண்டுவரச் சொன்னார் அவர் இன்றைக்கு உங்கள் மீதும் பவனி செய்ய விரும்புகிறார் நீங்கள் அவரைக் சுமந்து செல்ல விரும்புகிறீர்களா கழுதைக்கு மரியாதை அல்ல அதன்மேல் ஏறி அமர்ந்து இருக்கும் ராஜாவுக்கு மரியாதை இன்றைக்கும் ஒரு கழுதையைப் போல நீங்களும் இயேசுவை சுமக்க ஆயத்தமா? அன்றைக்கு சுமந்த அந்த கழுதையை ஒவ்வொரு வருடமும் எல்லா சபையினரும் நினைவு கூறுகிறார்களே நீங்களும் இயேசுவை சுமந்தீர்களானால் எப்பொழுதும் நினைவு கூறப்படுவீர்கள் என்பதை நினைத்துக்கொள்ளுங்கள். கர்த்தருடைய கிருபை உங்களோடு நிச்சயமாய் இருக்கும் அந்தக் கழுதை எங்கே போவது என்று தெரியாமல் இரு வழிகளில் கட்டப்பட்டதாக சொல்லப்படுகிறது மரணமும் ஜீவனும் இரண்டு அதிகாரமும் உடைய இரண்டு தன்மைகளையுடைய ராஜ்யங்கள் உண்டு ஒன்று வலப்பக்கம் மற்றொன்று இடப்பக்கம் ஆண்டவராகிய இயேசு இரண்டு பக்கமாக ஆட்டுக் குட்டிகளைப் பிரித்து வைத்திருக்கிறதை பார்க்கிறோம். வலப்பக்கத்தில் ஒரு கூட்டத்தையும் இடப்பக்கத்தில் ஒரு கூட்டத்தையும் அப்படியானால் ஒரு பக்கத்தின் கூட்டம் தேவனுக்கு பிரியமாய் நடக்க விரும்புகிற கூட்டம் ஒரு பக்கத்தின் கூட்டம் உலக லவ்கீக கவலைகளினால் அழுத்தப்படுகிற கூட்டம் நீங்கள் எதில் இருக்க விரும்புகிறீர்கள் இயேசு விரும்புகிறபடி அவரை சுமந்து செல்லுகிற கூட்டத்தில் இருக்கப் போகிறீர்களா அல்லது இந்த உலகத்தின் பார்வையில் விலையேறப்பெற்றதாயிருக்கிற கிரியைகளுக்கு உங்களை ஒப்புக்கொடுக்க போகிறீர்களா நிதானித்து அறியுங்கள் எதைச் செய்ய விரும்புகிறீர்கள் தேவ சித்தமா? அல்லது உலக உலகத்தின் இச்சைகளா? அல்லது உலகத்தின் தேவைகளை தெரிந்து கொள்ளப் போகிறீர்களா? ஜீவனையா? அல்லது மரணத்தையா? இயேசு கிறிஸ்துவின் மூலமாய் மாத்திரமே இரட்சிப்பு உண்டு. இந்த உலகத்தில் அனேக கர்த்தாக்கள் உண்டு இந்த உலகத்தில் தங்களை தெய்வங்கள் என்று சொல்லுகிறவர்கள் அநேகம் உண்டு ஆனால் கிறிஸ்து ஒருவரே மெய்யான வழியாய் பிதாவினிடத்தில் போகக் கூடிய ஒரே வாசலாய் அவர் இருக்கிறார் எதைத் தெரிந்து கொள்ளப் போகிறீர்கள்? பிரியமானவர்களே இந்த நாளில் உங்களை ஒப்பு கொடுப்பீர்களா தேவ சித்தம் செய்ய வேண்டும் என்கிற ஏக்கம் உங்களுக்குள் பெருகட்டும் மாற்கு 11:7ல் வாசிக்கிறோம் அவர்கள் அந்த குட்டியை இயேசுவினிடத்தில் கொண்டு வந்து அதன் மேல் தங்கள் வஸ்திரங்களை போட்டார்கள் அவர் அதன் மேல் ஏறி போனார். அநேகர் தங்கள் வஸ்திரங்களை வழியில் விரித்தார்கள் வேறு சிலர் மரக்கிளைகளை தரித்து வழியிலே பரப்பினார்கள் முன்நடப்பாரும் பின்நடப்பாரும்அதாவது இயேசுவுக்கு முன்னாடி வழியில் நடந்தவர்களும் சரி பின்னாடி நடந்தவர்களும் சரி அந்த மணி நேரத்திலே ஓசன்னா கர்த்தரின் நாமத்தினாலே வருகிறவர் ஸ்தோத்திரிக்கப்பட்டவர் கர்த்தரின் நாமத்தினாலே வருகிற நம்முடைய பிதாவாகிய தாவீதின் ராஜ்யம் ஆசீர்வதிக்கப்படுவதாக உன்னதத்தில் ஓசன்னா என்று சொல்லி ஆர்ப்பரித்தார்கள் அல்லேலூயா!
ஆண்டவரை அன்றைக்கு இரட்சிக்கும்படி கூப்பிட்ட அந்த ஜனங்களை போல நீங்களும் இந்த நேரத்திலே கூப்பிடுவவீர்களா அப்படி அவரை நோக்கி கூப்பிடும் போது அவர் நிச்சயமாகவே உங்களை விடுவிப்பார். உங்களுடைய பிரச்சனை பெரிதாக இருக்கலாம்! உங்கள் போராட்டங்கள் பெரிதாக இருக்கலாம்! ஒருவேளை நீங்கள் கண்ணீரோடு இருக்கலாம்! உங்களுக்கு உதவி செய்ய யாருமே இல்லையே என்று இருக்கலாம்! இந்த நேரத்தில் இயேசு உங்களுக்காக வருகிறார் பிரியமானவர்களே நீங்கள் அவரை நோக்கி பார்த்து ஓசன்னா என்று சொல்லி நீங்கள் அவரை நோக்கி பார்க்கும் போது அவர் நிச்சயமாகவே உங்களை விடுவிக்க வல்லவராகவே இருக்கிறார். வாயுள்ள பிள்ளை பிழைக்கும் என்று சொல்லி நம்ம ஊர்ல ஒரு பழமொழி உண்டு வேத வசனம் சொல்லுகிறது உன் வாயை விரிவாய் திற அதை நன்மையினால் நிரப்புவேன் ஆண்டவர் உங்களை நன்மையினால் நிரப்ப விரும்புகிறார் ஆனால் நீங்கள் கேட்கும்போது மட்டுமே. அவரிடத்தில் கேட்கிற எவனும் பெற்றுக்கொள்கிறான் ஆமென்! ஆண்டவரை அன்றைக்கு ஆராதித்த ஆர்ப்பரித்த ஜனங்கள் உண்டு. நீங்கள் என்ன செய்யப் போகிறீர்கள் இந்த நாளில் ஓசன்னா தாவீதின் குமாரனுக்கு ஓசன்னா என்று சொல்லி ஆர்ப்பரிக்க போகிறீர்களா? என்ன செய்யப் போகிறீர்கள் ஒருமனப்பட்டு நாம் அவரை ஆராதிப்போம் அவரை இருதயத்தில் கூப்பிடுவோம் ஆண்டவரே என்னுடைய நிலைகளை அறிந்து இருக்கிறவரே எனக்கு உதவிசெய்யும் என்று சொல்வோமா? இப்படி நாம் சொல்லும்போது அவர் நிச்சயமாகவே நமக்கு செவிகொடுக்க வல்லவராய் இருக்கிறார் ஆமென்! ஆமென்! ஆமென்!
ஜெபிப்போம்! கிருபை நிறைந்த நல்ல ஆண்டவரே நாங்கள் பார்த்தபடி அந்த நாளில் நீர் இந்த உலகத்தில் வாழ்ந்த போது அப்பா உம்மை முன் நடப்பார் பின்னரும் ஓசன்னா என்று சொல்லி ஆர்ப்பரித்தது போலவே நாங்களும் ஆர்ப்பரிக்க உம்முடைய இரட்சிப்பை பெற்றுக்கொள்ள கிருபை தாரும் இயேசுவின் நாமத்தில் வேண்டிக் கொள்கிறோம் ஜீவனுள்ள நல்ல பிதாவே ஆமென்! ஆமென்! ஆமென்!
கிருபையும் சத்தியமும் தேவ தயவும் உங்களில் ஆளுகை செய்து பெருகுவதாக ஆமென்! ஆமென்! ஆமென்!
கிறிஸ்துவின் சீஷர்கள் ஊழியங்கள்
உங்கள் சகோதரன் புரூஸ்
+91 970 36 76 184