Severity: 8192
Message: ctype_digit(): Argument of type null will be interpreted as string in the future
Filename: libraries/Pagination.php
Line Number: 522
Backtrace:
File: /home2/intouwcw/public_html/disciplesofchristm.com/application/controllers/Tamil.php
Line: 62
Function: create_links
File: /home2/intouwcw/public_html/disciplesofchristm.com/index.php
Line: 315
Function: require_once
சென்னையிலிருந்து ஒரு சகோதரன், மிகுந்த வயிற்று வலியினால் அவதிப்பட்ட நிலையில் சகோதரரை தொடர்பு கொண்டு ஜெபித்த போது, கர்த்தர் அதிசயமாய் சுகம் தந்தார். தேவனுக்கே மகிமை!
அனுஷா என்கிற மகளுக்கு அநேக நாளாய் இருந்த திருமண தடை மாறும்படி தேவன் கிருபை செய்தார். திருமணம் ஒழுங்கு செய்யப்பட்டு, ஏற்ற நேரத்தில் தேவன் அற்புதமாய் ஒரு குறைவின்றி திருமணத்தை நடத்திக் கொடுத்தார்! தேவனுக்கே மகிமை!
கிராம ஊழியத்தில் சில சகோதரிகள்! நம்முடைய தேவ செய்தியினால் தொடப்பட்டு, கிறிஸ்துவுக்குள் தங்களின் சுபாவங்களை காத்துக்கொள்ள சீஷத்துவதிற்க்கு நேரே நடக்கிற சட்சிகளை தேவன் கேட்கும்படி செய்தார் தேவனுக்கே மகிமை! இன்னும் கிறிஸ்துவுக்குள் முன்னேறி நடக்க தேவன் அவர்களை நடத்தும்படி ஜெபியுங்கள்.
சகோதரன் தொடர்ந்து தொலைபேசியின் வாயிலாக ஜெபித்து கொண்டு தேவனுடைய அபிஷேகத்தில் நிரம்பி, கிருபாவரங்களினால் நிரம்பி சட்சியளித்தார்கள் தேவனுக்கே மகிமை!
22 ஆண்டுகளாக இருந்த கருப்பை பிரச்சனையை நமது ஊழியர்கள் பாரத்தோடு ஜெபித்த பின் தேவன் அற்புதமாய் சுகமாக்கினார் தேவனுக்கே மகிமை!
ஜான்சி ஜெபராஜ் - சகோதரி சீஷர்கள் ஜெபவீடுக்கு (DPH) வந்தபோது, ஆஸ்துமா நோயால் மிகவும் உடல்நிலை சரியில்லாமல் இருந்தார்கள். ஜெபத்தின்பின் தேவன் முழுமையாக குணமாக்கினார், தேவன் சளி மற்றும் இருமலில் இருந்து மீண்டார். ஆட்டுக்குட்டியானவருக்கே எல்லா துதியும் கணமும் மகிமை உண்டாவதாக!
ஜெபா ஜென்சி - புதிதாகப் பிறந்த குழந்தை தொடர்ந்து 3 நாட்கள் அழுகிறது. சகோ புரூஸ் & சகோதரி ஜாஸ்லின் புரூஸ் இருவரும் அவர்கள் வீட்டிற்குச் சென்றோம், நாங்கள் அவர்கள் வீட்டை அடைந்த தருணம் குழந்தையின் அழுகை நின்று போனதாக அவர்கள் குடும்பத்தால் சாட்சியமளிக்கப்பட்டது. ஜெபத்திற்குப் பிறகு பிசாசின் தாக்குதலில் இருந்து குழந்தை விடுபட்டது. குழந்தை இயல்பு நிலைக்கு திரும்புகிறது. ஆட்டுக்குட்டியானவருக்கே எல்லா துதியும் கணமும் மகிமை உண்டாவதாக!
கிரேஸ்லின் மும்பை - சகோதரியின் வேலையில் இருந்த சிக்கல் நீங்கி, பிரார்த்தனைக்குப் பிறகு நல்ல சம்பளத்துடன் ஒரு புதிய வேலை கிடைத்தது. திருமணத் தடை சமீபத்தில் நீங்கி திருமணம் நடந்தது .ஆட்டுக்குட்டியானவருக்கே எல்லா துதியும் கணமும் மகிமை உண்டாவதாக!
சாந்தி தாவீது - சகோ தாவீதுவுக்கு மாரடைப்பு வந்தது மற்றும் இதய ஸ்பெஷலிஸ்ட் டாக்டரால் டெஸ்ட் மூலம் பரிசோதித்தபோது உறுதி செய்யப்பட்டது. ஸ்கேன் செய்து திரும்பி வருமாறு டாக்டர் அறிவுறுத்தினார், சகோதரர் தவீது அதைப் பற்றி மிகவும் பயந்தார். சகோதரர் புரூஸ் & சகோதரி ஜாஸ்லின் அவரது வீட்டிற்கு சென்று அவரை சந்தித்து பிரார்த்தனை செய்தனர். தேவன் உடனடியாக அவரை குணமாக்கினார். அடுத்த நாள் ஸ்கேன் எடுத்து மருத்துவரை சந்திக்கச் சொல்லி அனுப்பப்பட்டார். ஸ்கேன் செய்த ரிப்போர்ட்டில் எந்த பிரச்சனையும் இல்லை என்று மருத்துவர் கண்டு ஆச்சரியப்பட்டார். ஆட்டுக்குட்டியானவருக்கே எல்லா துதியும் கணமும் மகிமை உண்டாவதாக!
ஜேக்கப் தாமஸ் - சகோதரர் புரூஸை அவர்களை போனில் தொடர்பு கொண்டார். மேலும் தேவனுடைய ஆவியானவரின் நிரப்புதலுக்காக ஒன்றாக பிரார்த்தனை செய்தார்கள் தேவன் அவரை மகிமையான அபிஷேகத்தால் நிரப்பினார் மற்றும் சில உடல்நல உபாதைகள் குணமாகியது.
ஹெப்சி கிளெமென்ட் - முதுகெலும்பு மற்றும் தலை வலியுடன் சில நோய்களில் பிடிக்கப்பட்டிருந்த சகோதரியை கர்த்தர் குணமாக்கினார். அடைக்கலப்பட்டணத்திற்கு வந்து சகோதரி ஜாஸ்லின் புரூஸுடன் சேர்ந்து பிரார்த்தனை செய்த போது பரிசுத்த ஆவியானவர் நிரப்பினார்
சகோதரி லீதியால் - பணபிரச்சனைக்காக மற்றும் வேலைக்காக ஜெபித்தபோது தேவன் ஒரு அரசாங்க வேலையை வழங்கினார். சரீர உபாதைகளில் தேவன் விடுதலையை அளித்தார். ஆட்டுக்குட்டியானவருக்கே எல்லா துதியும் கணமும் மகிமை உண்டாவதாக!
சகோதரர் ஜான் வெஸ்லி & சகோதரி குளோரி - கீழ வெள்ளமடம் என்ற கிராமத்தில் நாங்கள் சகோதரி குளோரி ஒரு ஜெப கூட்டத்திற்கு வந்திருந்தார்கள். அவர்களுக்காய் நாங்கள் ஜெபித்தபோது, அவர்கள் நடந்துகொண்டிருக்கும் இருள் வாழ்க்கையைப் பற்றியும், பிசாசின் தாக்குதலால் அவதிப்படுவதையும் தேவன் வெளிப்படுத்தினார். நாங்கள் அவளுடைய வீட்டிற்குச் சென்று ஜெபம் செய்தோம், அவர்களது வீட்டில் ஒரு சூனியகட்டு இருக்கிறதென்று, கர்த்தர் வெளிப்படுத்தினார், 21 நாட்கள் தொடர் ஜெபத்திற்குபின் முழு குடும்பத்தினரையும் தேவன் விடுவித்து அவர்களை ஒவ்வொரு காரியத்திலுமிருந்து மீட்டெடுத்தார். ஆட்டுக்குட்டியானவருக்கே எல்லா துதியும் கணமும் மகிமை உண்டாவதாக!
John Wesley & Glory - Glory came for a Meeting we had at village Called Keezha Vellamadam. When we had prayed Lord reveled about the Darkness Life which they are undergoing and suffering of the devil's attack. we went her home and prayed, Lord Said that there is a Witchcraft at their home, After 21 Days of Prayer for the whole family Lord Deliver them and recovering them one by One. All Glory and Honor to the Lamb of GOD Amen!
சகோதரி சரோஜா & சகோதரர் ராஜமணி - கடந்த 7 ஆண்டுகளாக எந்த ஆசீர்வாதமும் வருமானமும் இல்லாமல் அவர்களின் வாழ்க்கையில் மிகப்பெரிய தோல்வி ஏற்பட்டது. அவர்கள் சீஷர்கள் ஜெபவீட்டிக்கு வந்தபோது, அவர்கள் சூனியத்தின் பிடியில் பிணைக்கப்பட்டுள்ளதாக தேவன் வெளிப்படுத்தினார், பின்பு அவர்கள் வீட்டிற்கு சென்று ஜெபம் ஏறெடுக்கப் பட்டது. சூனிய பொருட்களை தேவன் வெளிப்படுத்தினார், அதை வெளியே எடுத்த பிறகு அது சுட்டேரிக்கப்பட்டது. தேவன் அவர்களை முழுமையாக விடுவித்தார். ஆட்டுக்குட்டியானவருக்கே எல்லா துதியும் கணமும் மகிமை உண்டாவதாக!
சகோதரி சோபா - சேலத்தில் உள்ள அவரது வீட்டில் நடந்த பிசாசின் தாக்குதலால் படுக்கையில் இருந்தார்கள். கால்களைக் கூட நகர்த்த முடியயாத சூழ்நிலை. ஜெபித்தபோது, வீட்டை மாற்றும்படி கர்த்தர் அவர்களுக்கு வெளிப்படுத்தினார். தேவன் அவள் குணப்படுத்துவதை தீர்க்கதரிசனமாக உரைத்தார். வீட்டை மாற்றி கர்த்தருக்கு கீழ்ப்படிந்தபின் விடுதலையை பெற்றுக் கொண்டார்கள். பின்பு அவர்கள் ஒருவரின் உதவியுடன் சீஷர்கள் ஜெபவீட்டிக்கு @ வடக்கு வேப்பிலான் குளத்திற்கு வந்திருந்தார்கள், சமீப நாட்களில் வேறுஒருவரின் துணையில்லாமல் தனியாக நடந்து வந்தார்கள். தேவன் சகோதரியை பலப்படுத்தி முழுமையாக குணப்படுத்தினார். ஆட்டுக்குட்டியானவருக்கே எல்லா துதியும் கணமும் மகிமை உண்டாவதாக!
ஜீவா மேரி - பரிசுத்த ஆவியை பெற்று கொள்ள தாகம் கொண்டிருந்தாள், சகோதரி ஜாஸ்லின் ஜீவா மேரிக்காக ஜெபித்தபோது, கர்த்தர் அவளை நிரப்பினார். 33 வயதில் தேவன் திருமண பந்தத்தை ஏற்படுத்தி கொடுத்தார். ஆட்டுக்குட்டியானவருக்கே எல்லா துதியும் கணமும் மகிமை உண்டாவதாக!
கடுமையான நீரிழிவு / நுரையீரல் பிரச்சினைகளிலிருந்து விடுதலை - ஐசியு - கேரிசா என்ற பெண் குழந்தை, உடல்நிலை சரியில்லாமல் மயக்கமடைந்து 5 நாட்கள் ஐசியுவில் இருந்தது. கடுமையான நிலைமை காரணமாக மருத்துவர்கள் நம்பிக்கையற்றவர்களாக இருந்தனர். தேவன் மகளை ஒரு பரலோக குணப்படுத்துதலுடன் தொட்டார். தனது படிப்பை மீண்டும் தொடங்கிட தேவன் கிருபை செய்தார். தேவனுக்கே எல்லா துதியும் மகிமையும் உண்டாவதாக ஆமென்!
வியாதியின் படுக்கையில் விடுதலை - சகோதரி காஞ்சனாவின் தாய் சில மாதங்களாக பெலவீனத்தினால் படுக்கையில் இருந்தார். ஜெபதிற்கு பின் கர்த்தரால் குணமாக்க பட்டார். தேவனுக்கே மகிமை! ஆமென்!
பிசாசின் போராட்டத்திலிருந்து விடுதலை - சகோதரி செல்வமணி பிசாசின் தாக்கப்பட்டு, சரியாக சுவாசிக்க முடியவில்லை, முழு உடலிலும் வீக்கம் ஏற்பட்டது மற்றும் சுமார் 6 மாதங்களாக வலியால் அவதிப்பட்டார். அவர் பல மருத்துவர்களிடம் சென்றார், ஆனால் குணப்படுத்தப்படவில்லை. ஊக்கமான பிரார்த்தனைக்கு பின் உடனே தேவன் அவர்களை விடுவித்தார். தேவஆட்டுக்குட்டியை மகிமைப்படுத்துங்கள் ஆமென்!