• info@disciplesofchristm.com
  • +91 9703676184, +91 7010068654
நமதுநோக்கம்

நோக்கம்

  • சுவிசேஷத்தை அறிவித்து கிறிஸ்து இயேசுவின் சீஷர்களாய் மாற்றுதல்
    "புறப்பட்டுப்போய் சகல ஜாதிகளையும் சீஷராக்கி, பிதாகுமாரன் பரிசுத்த ஆவியின் நாமத்திலே அவர்களுக்கு ஞானஸ்நானங்கொடுத்து, நான் உங்களுக்குக் கட்டளையிட்டயாவையும் அவர்கள்கைக் கொள்ளும்படி அவர்களுக்கு உபதேசம் பண்ணுங்கள்;" மத்தேயு 28:19,20 ன் படி கிறிஸ்துவின் சீஷர்களாய் மாற்றுதல்
  • அழிந்து போகிற ஆத்துமாக்களுக்காய் ஜெபிப்போம்
    "நான் தேசத்தை அழிக்காத படிக்குத்திறப்பிலே நிற்கவும் சுவரை அடைக்கவுந்தக்கதாக ஒரு மனுஷனைத் தேடினேன், ஒருவனையும் காணேன்". எசேக்கியேல் 22:30 ல் எழுதி இருக்கிறபடி,ஆண்டவராகிய இயேசுகிறிஸ்துவின் பாரத்தின் அடிப்படையில் பாவம், வியாதி, கட்டுகள், சாபங்கள், பிசாசின் போராட்டங்கள் போன்றவற்றிலிருந்து விடுவிக்கும் ஆத்துமபார ஜெபங்கள்
  • ஏழை/எளியவர்களை நினைவு கூறுவோம்
    "தரித்திரருக்கு ஏதாகிலும் கொடுக்கும் படிக்காவது" யோவான் 13:29 ல் சொல்லுகிற படி கர்த்தராகிய இயேசுவே எளியவர்களை நினைவு கூர்ந்ததை பார்க்கிறோம். அப்படிபோலவே நாமும் ஏழை எளியவர்களை நினைவுகூர்ந்து அவர்களுக்கு நம்மால் ஆன பொருளுதவிகளை கொடுப்போம்.
  • கிறிஸ்துவுக்காய் மரிப்பதற்கும் ஆயத்தம்
    அப்போஸ்தலனாகிய பவுல் சொல்கிறது போல அப்போஸ் தலர் 21:13 "எருசலேமில் நான் கர்த்தராகிய இயேசுவின் நாமத்திற்காகக் கட்டப்படுவதற்கு மாத்திரமல்ல, மரிப்பதற்கும் ஆயத்தமாயிருக்கிறேன்" மற்றும் பிலிப்பியர் 1:21 கிறிஸ்து எனக்கு ஜீவன், சாவு எனக்கு ஆதாயம். கிறிஸ்துவின் மீதுள்ள விசுவாசத்தினாலே அவருக்காய் மரிக்கவும் ஆயத்தம்.
நமது தரிசனம்

தரிசனம்

  • சபைகளின் மறுமலர்ச்சி
    • அப்போஸ்தலர்களின் நாட்களைப்போலவே, சிலுவையையும் தேவசித்தத்தையும் நோக்கி சபைகள் கொண்டுவரப்பட சபைகளில் பிரசங்கித்தல்
    • தேவபிள்ளைகள் எங்கிருந்தாலும் சீஷத்துவத்தில் வளரும்படி செய்திட
  • ஊடக ஊழியங்கள்
    • சமூகவலைத்தளத்திலும் தொலைக்காட்சியிலும் ஒளி ஒலி வடிவ செய்திகள்
    • எழுத்து வடிவில் வேதவசனத்திலிருந்து தினதியானங்கள்
  • மனிதாபிமான சேவைகள்
    • தேவனுடைய அபரிவிதமான திட்டத்தின் படியும் ,உபாகமம் 29 : 5 "நான் நாற்பது வருஷம் உங்களை வனாந்தரத்தில் நடத்தினேன்; உங்கள் மேல் இருந்தவஸ்திரம் பழையதாய்ப் போகவும் இல்லை, உங்கள் காலிலிருந்த பாதரட்சைகள் பழையதாய்ப்போகவும் இல்லை. இந்த வசனத்தின் படி "கர்த்தருடைய கைகுறிகியிருக்கிறதோ" என்கிற சவாலான கேள்வியினால் பிறந்த ஊழியமே அடைக்கலப்பட்டணம் ஊழியங்கள்.
    • விதவைகள் ஆதரவற்றோர்க்கு தேவைகளை வழங்குவதன் மூலம் ஏழைகளை நினைவில் கொள்வது
  • கல்வி சேவைகள்
    • கல்விதேவைப்படும் குழந்தைகளுக்கு ஆதரவளித்தல்
    • இலவச கல்வி நிறுவத்தின் தேவதரிசனம்
  • சுவிசேஷம் & சபைஸ்தாபிப்பு
    • கிராமங்களில் நற்செய்தியைப் பிரசங்கித்தல் மற்றும் தேவைப்படும் இடங்களில் தேவாலயங்களை உருவாக்குதல்.
  • சீஷத்துவம் & பயிற்சி
    • கிறிஸ்துவில் புதிய விசுவாசிகளை அவருடைய சீஷர்களாக பயிற்றுவிக்க
    • கிறிஸ்துவின் நற்செய்தியை அறிவிக்க விசுவாசிகளை ஆயத்தப்படுத்துதல்
  • மருத்துவ ஊழியங்கள்
    • முறையான மருத்துவ வசதி இல்லாத கிராமப்புறங்களில் இலவச மருத்துவ முகாம் நடத்தும் திட்டம்
    • கிறிஸ்துவின் அன்பை அவர்களுக்கு காண்பித்திட